பணி நிரந்தரம் செய்ய கோரி, கவுரவ பேராசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்

2 years ago 998

பெங்களூரு : பணி நிரந்தரம் செய்ய கோரி, கவுரவ பேராசிரியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்

. இதனால் அரசு பி.யு., கல்லுாரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் கொரோனா இரண்டாவது அலைக்கு பின், நான்கு மாதத்துக்கு பின் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன.கல்லுாரிக்கு மாணவர்கள் வந்தாலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்தப்படவில்லை.மேலும், கவுரவ பேராசியர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, 29வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில், 430 அரசு பி.யு., கல்லுாரிகள் உள்ளன. இதில் 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே நிரந்தர பேராசிரியர்கள் உள்ளனaf. மீதம், 70 சதவீதம் அளவுக்கு கவுரவ பேராசிரியர்களை வைத்தே பாடம் நடத்தப்படுகிறது.அதிலும் சில கல்லுாரிகளில் கவுரவ பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்; நிரந்தர பேராசியர்கள் இல்லை.இந்த நேரத்தில் கவுரவ பேராசிரியர்கள் வகுப்பறைகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதால், மாணவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே கொரோனாவின் இரண்டு அலையால் கல்லுாரியில் முழுமையாக வகுப்புகள் நடத்தப்படவில்லை.மாணவர்கள் அரட்டை தற்போது, பேராசிரியர்களின் போராட்டத்தால் கல்லுாரிக்கு வரும் மாணவர்கள் அரட்டை அடித்து, வீட்டுக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது.பணம் இருப்பவர்கள் தனியார் கல்லுாரியில் சேர்ந்து படிக்கின்றனர். ஏழைகள், நடுத்தர வர்க்கதது மாணவர்கள் அரசு கல்லுாரியையே நம்பி இருக்க வேண்டி உள்ளது.கவுரவ பேராசியர்களில் பெரும்பாலானவர்கள் முதுகலை, ஆய்வு படிப்பை முடித்தவர்கள்.

இவர்கள் 15 முதல் 20 ஆண்டு வரை பணியில் இருந்தாலும் நிரந்தரம் செய்யப்படுவதில்லை.பணி நிரந்தரம் இல்லாததால், குறைவான சம்பளத்தில் குடும்பத்தை நிர்வகிக்க முடியவில்லை.எனவே, பணி நிரந்தரம் செய்ய விதிமுறைகளை திருத்த வேண்டும். இல்லை என்றால் மேற்கு வங்கத்தில் உள்ளது போன்ற விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என கோரி வருகின்றனர்.எனவே, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Read Entire Article