பறவைக் காய்ச்சல் அச்சம் முதல் சபரிமலை சீசன் வரை... மந்தமாகும் கோழி இறைச்சி விற்பனை

2 years ago 684

Chicken-rate-comes-down-dute-to-fear-of-Bird-flu

கேரளாவில் பறவைக் காய்ச்சல் அச்சம் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் மாலை போடுவோர் எண்ணிக்கை உயரும் சீசன் என்பதால், தமிழகத்தில் கறிக்கோழியின் விற்பனை சரிந்துள்ளது. கடந்த 2 நாட்களில் உயிருடன் உள்ள கோழி, ஒரு கிலோவுக்கு 19 ரூபாய் விலை சரிந்துள்ளது. அந்தவகையில் உயிருடன் ஒரு கிலோ கோழி 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை மந்தமானதாலும், உற்பத்தி அதிகரித்ததாலும் கோழிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், விற்பனையை அதிகரிக்க கறிக்கோழி விலையையை வியாபாரிகள் குறைத்து வருகின்றனர். முன்னதாக நேற்று உயிருடன் உள்ள கோழி ஒரு கிலோவுக்கு 12 ரூபாய் விலை குறைக்கப்பட்ட நிலையில், அந்தவகையில் தற்போது மேலும் 7 ரூபாய் விலை குறைத்து விற்கப்படுகிறது.

இதன்படி தற்போது, உயிருடன் கோழி ஒரு கிலோ 83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

image

வரும் நாட்களில் கறிக்கோழி விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை உயரும் என பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி: குஜராத்: அசைவ உணவுகள், இறைச்சிகளை கடைகளில் பொதுவாக காட்சிப்படுத்த வதோதராவில் தடை

Read Entire Article