பாகிஸ்தானில் பனிப்புயலில் சிக்கி 22 சுற்றுலாப் பயணிகள் பலி

2 years ago 881

At-least-22-dead-as-heavy-snow-traps-vehicles-in-Pakistan-resort

பாகிஸ்தானில் வீசிய பனிப்புயலில் சிக்கி 22 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள MURREE என்ற மலைவாசஸ்தலம், பனிப்பொழிவுக்கு பிரசித்திப் பெற்றது. இங்கு ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா சென்றிருந்த நிலையில், திடீரென பனிப்புயல் தாக்கியதால் சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான வேன்கள், கார்கள் பனிப்புயலில் சிக்கின. தகவலறிந்து மீட்புப்படையினர் வருவதற்குள் சுற்றுலாப் பயணிகள் 22 பேர் உயிரிழந்தனர்.

வரலாறு காணாத அளவுக்கு பெய்த பனிப்பொழிவே இதற்கு காரணம் என கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பனிமலையில் ஆங்காங்கே சிக்கியுள்ள வாகனங்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். முர்ரீ பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article