நடிகர் ரெடின் கிங்ஸ்லி சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ சிம்புவின் ‘பத்து தல’ படங்களில் இணைந்திருக்கிறார்.
நாகேஷ், செந்தில், வடிவேலு, யோகி பாபு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் உடல்மொழியால் சிரிக்க வைத்தார்கள். ஆனால், ரைமிங் - டைமிங் நகைச்சுவை இல்லாமல் கூட வாய்மொழியால் சிரிக்க வைக்கலாம் என்பதற்கு உதாரணம் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. நயன்தாராவின் ’கோலமாவு கோகிலா’, ‘நெற்றிக்கண்’ படங்களில் பேசியே சிரிக்க வைத்தவர், தற்போது வெளியாகியுள்ள ‘டாக்டர்’ படத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
‘டாக்டர்’ படத்தை பார்ப்பவர்கள் அனைவருமே ரெடினை பாராட்டாமல் இருப்பதில்லை. அவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைக்காத குறைதான். அந்தளவிற்கு, முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்து வருகிறார்.
தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவரும் ரெடின் கிங்ஸ்லி அடுத்ததாக சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, சிம்புவின் ‘பத்து தல’ படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும், ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.