சினிமா
Published : 13,Oct 2021 02:30 PM
அஜித்தின் ‘வலிமை’ படத்தின் டீசர் வரும் 2022 புத்தாண்டையொட்டி வெளியாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ’வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது என்று சமீபத்தில் அறிவித்தார். இதுவரை ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் மட்டுமே எப்போது வெளியாகும் என்று அறிவித்தது படக்குழு.
ஆனால், ஃபர்ஸ்ட் லுக், புகைப்படங்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவற்றை எப்போது வெளியாகும் என்று அறிவிக்காமல் திடீரென வெளியிட்டார் போனி கபூர். இப்படி அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதே போனி கபூர் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதேபோல், புத்தாண்டையொட்டி அஜித் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக ‘வலிமை’ படத்தின் டீசரை வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags : அஜித், போனிகபூர், வலிமை, டீசர், புத்தாண்டு, ajith, valimai, teaser, new year, boney kapoor,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved