புனே கலைக்கூடம்: நிர்வாண புகைப்படங்கள் இடம்பெற்றதால் நிறுத்தப்பட்ட கண்காட்சி

2 years ago 787

Exhibition-at-Pune-art-gallery-stopped-over-nudity-in-photographs

புனேவில் உள்ள ஒரு கலைக்கூடத்தில், புகைப்படங்களில் உள்ள 'நிர்வாண' அம்சத்தைக் காரணம் காட்டி கண்காட்சி நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக புனே நகரில் கலைக்கூடம் அமைந்துள்ள பால்கந்தர்வ் ரங் மந்திரின் பொறுப்பாளர் சுனில் மேட் கூறுகையில், "புகைப்படக் கலைஞர் அக்‌ஷய் மாலி, கண்காட்சி தீம் குறித்து நிர்வாகத்திடம் முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். ஒருவரின் உணர்வுகளைப் புண்படுத்தும் எந்த ஒரு கண்காட்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய நிர்வாணம் எங்கள் ஆர்ட் கேலரிக்கு பொருத்தமாகத் தெரியவில்லை, அந்த கண்காட்சியின் புகைப்படங்கள் மற்றும் தீம் பற்றி அறிந்ததும், புகைப்பட கலைஞரிடம் படங்களை அகற்றும்படி கூறப்பட்டது" என்று கூறினார்.

image

அக்‌ஷய் மாலியின் புகைப்படங்களின் மூன்று நாள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது, ஆனால் அது சனிக்கிழமை நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக பேசிய புகைப்பட கலைஞர் அக்‌ஷய் மாலி,"கண்காட்சியின் கருப்பொருள் 'IT'S ME' இதில் கலையின் எல்லைகள் உடைக்கப்பட்டன. கண்காட்சியில் எனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் இயற்கையாக கிளிக் செய்யப்பட்ட மற்ற மாடல்கலின் படங்களும் இருந்தன. சனிக்கிழமையன்று, ஆர்ட் கேலரியின் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் புகைப்படங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்து அவற்றை அகற்றுமாறு கேட்டுக் கொண்டனர். நான் ஸ்லாட்டை முன்பதிவு செய்தபோது, நிர்வாண தீம் பற்றி நிர்வாகத்திடம் கூறவில்லை. புகைப்படக் கண்காட்சி என்று குறிப்பிட்டு ஸ்லாட்டை முன்பதிவு செய்தேன்" என்று கூறினார்.

Read Entire Article