பெய்ரூட் வெடி விபத்து விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் 6 பேர் சுட்டுக் கொலை

3 years ago 272

Beirut-port-blast--The-tensions-around-the-investigation

பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆண்டு நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2013 ஆம் ஆண்டு சரக்குக் கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் துறைமுகக் கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் விபத்து நேரிட்டதாக அதன் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. 5,000த்துக்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

தொடர்புடைய செய்தி: லெபனான் வெடிவிபத்து: பெய்ரூட் நகரமே உடைந்து நொறுங்கியது- மீண்டவர்களின் நேரடி சாட்சியங்கள்

image

இந்த வெடிவிபத்து தொடர்பாக நீதிபதி தாரேக் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அவர் அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார் என கூறி பெய்ரூட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்து 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர். குறிப்பிட்ட இரண்டு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

Read Entire Article