பொங்கலுக்கு வெளியாகும் சதீஷின் நாய் சேகர்
09 ஜன, 2022 - 17:15 IST
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் நாய் சேகர். இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் வருகிற பொங்கல் தினத்தில் இப்படம் தியேட்டரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 2 மணி நேரம் 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த நாய் சேகர் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்திருக்கிறது.
மேலும் கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் அஜித்தின் வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் உள்ளிட்ட பல படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரமே வாகை சூடும், கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர் உள்ளிட்ட பல படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த நாய் சேகர் படத்தில் நாயின் குணங்கள் மனிதனுக்கும் மனிதனின் குணங்கள் நாய்க்கும் செல்வதால் என்னென்ன விபரீதங்கள் நிகழ்கிறது என்பதை படமாக்கி இருப்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்