மதுரா: யமுனை நதிக்கரையில் ராவணனுக்கு வழிபாடு செய்து மகிழ்ந்த மக்கள்

3 years ago 755

Ravana-worship-festival-held-in-a-riotous-manner-at-Uttar-pradesh

உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக ராவணனை வழிபட்டு கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரா நகரைச் சேர்ந்த மக்கள் இலங்கேஸ்வரனான ராவணனைப் போல ஒருவருக்கு அலங்காரம் செய்து, அவரை துர்க்கை அம்மன் கோயிலிலிருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பத்து தலையுடன் ராவணனைப் போலவே தோற்றம் கொண்ட அவர் கம்பீரமாக அங்கு வலம் வந்தார். பின்னர் யமுனை ஆற்றங்கரையில் அவருக்கு ஆரத்தி எடுத்து மக்கள் வணங்கினர்.

image

இதையும் படிங்க... இந்திய பாரம்பரிய இடங்கள் 4: மத ஒற்றுமையின் சாட்சி - எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைகள்!

இதைத் தொடர்ந்து, ராவணன் வேடமணிந்த நபர், ஆற்றங்கரையில் லிங்க வடிவில் இருந்த பரமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து ஆராதனை நடத்தி வழிபட்டார். மதுரா நகரில் ராவணனை கடவுளாக வழிபடும் இந்த வழக்கம் காலங்காலமாக இருந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

Read Entire Article