மருத்துவமனைக்குபஸ் வசதிஏற்படுத்த முடிவு

3 years ago 722

சாம்ராஜ் நகர்-ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த புதிய மருத்துவமனைக்கு பஸ் வசதி ஏற்படுத்த கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.சாம்ராஜ்நகரில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் திறந்து வைத்தார். இம்மருத்துவமனை சாம்ராஜ்நகர் புறநகரின் எடபெட்டா அருகில் உள்ளது.இதனால் நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினருக்கு, தொந்தரவாக உள்ளது. இவர்களின் வசதிக்காக, பஸ் வசதியை ஏற்படுத்தும்படி, மாவட்ட நிர்வாகம், சிம்ஸ் மருத்துவமனை சார்பில், கே.எஸ்.ஆர்.டி., யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு கே.எஸ்.ஆர்.டி.சி., சம்மதித்துஉள்ளது.சிம்ஸ் மருத்துவமனை முக்கியஸ்தர் சஞ்ஜீவ் கூறியதாவது:பழைய மருத்துவமனை, புதிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதும், பஸ் வசதியை ஏற்படுத்துவதாக கே.எஸ்.ஆர்.டி.சி., நம்பிக்கை அளித்துஉள்ளது.தற்போது சாம்ராஜ்நகர் பி.ராச்சையா இரட்டை சாலையில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் தாய், சேய் பராமரிப்பு பிரிவு, கொரோனா பிரிவு மட்டும் நீடிக்கிறது. மற்ற பிரிவுகள் புதிய மருத்துவமனைக்கு மாற்றப்படும்.பழைய மருத்துவமனையில, 300 படுக்கை வசதிகள் உள்ளது. புதிய மருத்துவமனைகள் பல திறன் கொண்டது. பல்வேறு சிறப்பு வல்லுனர்களும் கூட இங்குள்ளதால், தரமான சிகிச்சை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Read Entire Article