அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
தென்னாப்ரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டு பரவிய டெல்டா வகை தொற்றை விட இம்முறை ஒமைக்ரான் தொற்றே அதிகம் பேரை பாதித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று மட்டும் புதிய தொற்றுகள் எண்ணிக்கை 6 லட்சத்து 62 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் மருத்துவ கட்டமைப்பே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. எனினும் தற்போது தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதங்கள் தினசரி சுமார் ஆயிரத்து 400 என்ற குறைந்த அளவிலேயே நீடிப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது