முன்கள பணியாளர்களுக்கு இன்று பூஸ்டர் தடுப்பூசி; இணை நோய் உள்ளவர்களும் செலுத்தி கொள்ளலாம்

2 years ago 384

புதுடில்லி-நாடு முழுதும் உள்ள முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இன்று முதல், 'முன்னெச்சரிக்கை டோஸ்' எனப்படும், 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடும் பணி துவங்குகிறது.

latest tamil news

கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கிய நிலையில், நாடு முழுதும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர்.முன்பதிவுஇரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று பரவல் உலகையே அச்சுறுத்தி வருகிறது.

பல்வேறு நாடுகளும் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில், நம் நாட்டிலும் மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையில், முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தது. அந்தப் பணி இன்று முதல் துவங்குகிறது.

இதற்கான முன்பதிவு நேற்று முன்தினமே துவங்கி விட்டது. மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி உள்ளோர் யார், அதற்கான நடைமுறை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள 60 வயதினர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் மூன்றாவது டோஸ் போட தகுதிபெறுகின்றனர்.இவர்கள், 'கோ - வின்' இணையதளம் வாயிலாக தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அடையாள சான்றுடன் நேரடியாக சென்றும், மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

39 வாரங்கள்இரண்டாவது டோஸ் போட்ட தேதியில் இருந்து ஒன்பது மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிவடைந்தவர்கள் மட்டுமே, மூன்றாவது டோஸ் போட்டுக் கொள்ள தகுதி பெறுவர். முதல் மற்றும் இரண்டாவது டோஸின் போது போடப்பட்ட அதே தடுப்பூசி தான், மூன்றாவது டோஸாகவும் போடப்படும். இதில் கலப்பு இருக்காது.இதய நோய், நீரிழிவு, சிறுநீரக கோளாறு, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைகள், சிரோசிஸ், புற்று நோய், தொடர்ச்சி 6ம் பக்கம்'சிக்கில் செல் டிசீஸ்' எனப்படும், ரத்த அணு குறைபாடுகள் உள்ளிட்டவை இணை நோய்களாக கருதப்படும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியம் பெறும் ஆவணம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக அளிக்கலாம். தகுதி உள்ளோருக்கு முன்பதிவு செய்யாவிடினும் குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டல் அனுப்பப்படும்.முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி, தொற்று பாதிப்பு தீவிரமடைவதில் இருந்தும், உயிரிழப்பில் இருந்தும் பாதுகாக்கிறது. ஆனால், தடுப்பூசியின் வீரியம் குறிப்பிட்ட காலத்திற்கு பின் குறையத் துவங்கும்.உருமாறிய வகை கொரோனா வைரஸ் முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களை மீண்டும் தாக்கக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது. அதிலிருந்து அவர்களை பாதுகாக்கவே மூன்றாவது டோஸ் அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் துவக்கம்தமிழகத்திலும் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடுவது இன்று துவங்குகிறது. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார். வீணாகும் 'வென்டிலேட்டர்'அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். அதன் விபரம்: மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடந்த ஆண்டு கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் 'வென்டிலேட்டர்' இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், 1,600 வென்டிலேட்டர்கள் இன்னும் பொருத்தப்படாமல் கிடப்பில் உள்ளன. இது குறித்து மாநில அரசுகளுக்கு தொடர் நினைவூட்டல் செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை.தெலுங்கானாவில் 534, உ.பி.,யில் 236, தமிழகத்தில் 210, டில்லியில் 172, குஜராத்தில் 136 வென்டிலேட்டர்கள் பொருத்தப்படாமல் உள்ளன.கூடுதல் வென்டிலேட்டர்கள் தேவைப்படுவோர், வரும் 17க்குள் தகவல் தெரிவித்தால் மட்டுமே வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேல் வரும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

latest tamil news

அதிகரிக்கும்சுய பரிசோதனை!


ஒமைக்ரான் தொற்று பரவல் தீவிர மடைந்துள்ளதை அடுத்து, சுய பரிசோதனை கருவிகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது.மஹாராஷ்டிராவை சேர்ந்த, 'மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம், 'கோவிசெல்ப்' என்ற சுயபரிசோதனை கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஒரு கருவி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 1 - 7ம் தேதி வரையில் மும்பை நகரில் மட்டும் ஐந்து லட்சம் கருவிகள் விற்பனையாகி உள்ளன. டில்லியில் 2.5 லட்சம் கருவிகள் விற்பனையாகி உள்ளன.

Read Entire Article