ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை - ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றார் நவ்ஜோத் சிங் சித்து

3 years ago 308

Puthiyathalaimurai-logo

இந்தியா

16,Oct 2021 03:18 PM

Talks-with-Rahul-Gandhi-Navjot-Singh-Sidhu-withdraws-resignation-letter

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தமது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றார்.

ராகுல்காந்தியுடனான சந்திப்பின் போது அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேசியதாகவும், அவற்றுக்கு தீர்வு காணப்பட்டிருப்பதாகவும் நவ்ஜோத் சிங் சித்து விளக்கமளித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சராக பொறுப்பேற்ற சரஞ்சித் சிங் சன்னியுடன் கருத்து வேறுபாடு நீடித்ததால் சித்து கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். இதனை அடுத்து காங்கிரஸ் தலைமை அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியது, இந்நிலையில் ராகுல்காந்தியுடனான சந்திப்புக்கு பின்னர் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

இதனைப்படிக்க...மோசமான நிலையில் நாட்டின் பொருளாதாரம் - சோனியா காந்தி 

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article