ராமநாதபுரம்: அரசு தொடக்கப்பள்ளியில் புழு, வண்டுகளுடன் மாணவர்களுக்கு பருப்பு விநியோகம்

3 years ago 349

Distribution-of-lentils-with-worms-and-beetles-at-Ramanathapuram-Government-Primary-School

ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர் அருகே புழு, வண்டுகளுடன் மாணவர்களுக்கு பருப்பு விநியோகப்படுத்தப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு மாதந்தோறும் பருப்பு, முட்டை, அரிசி உள்ளிட்டவை சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அப்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொசுக்குடி கிராமத்தில் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று பருப்பு விநியோகிக்கப்பட்டது.

image

அப்படி விநியோகிக்கப்பட்ட அந்தப் பருப்பு, மாணவர்கள் சாப்பிட முடியாத அளவிற்கு புழுத்துப்போனதாக தரமற்ற முறையில் இருந்துள்ளது. மேலும் அதில் புழுக்களும் வண்டுகளும் கிடந்தன. இதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்துள்ளனர். அந்தத் தொடக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... காரைக்குடி: தரமான வசதியால் குவியும் மாணவர் சேர்க்கை.. திக்குமுக்காடும் அரசுப் பள்ளி

image

பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து பொசுக்குடி கிராமத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியரின் சத்துணவு அமைப்பு நேர்முக உதவியாளர் லீலாவதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், ‘மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பருப்புகளை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாணவர்களின் பெற்றோர்களிடம் உறுதியளித்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கேட்டபோது, மோசமான நிலையில் இருந்த பொருட்களை கொடுக்க கூடாது என சத்துணவு அமைப்பாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read Entire Article