ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த சீரியல் நடிகைகள்
16 அக், 2021 - 12:58 IST
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்களின் மனதை கவர்ந்த தொடர் யாரடி நீ மோகினி. பேய் நாடகமா குடும்ப நாடகமா என மக்களையே கன்ப்யூஸ் செய்தாலும் சுவாரசியமாக நகர்ந்த திரைக்கதை அத்தொடருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. அதே போல ரசிகர்களின் பேச்சைக்கேட்டு க்ளைமாக்ஸை ஷூட் செய்யும் அளவுக்கு ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமான இடத்தை இந்த தொடர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லியாக நடித்த சைத்ராவுக்கும் பேயாக நடித்த யமுனாவுக்கும் மிகப் பெரிய சண்டை நடப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதற்காக ரோப், க்ரெயின், ஜாக்கி போன்ற சினிமாக்களில் பயன்படுத்தப்படும் கருவிகளை வைத்து பெரிய சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கம் செய்திருந்தனர். இதில் நடிகைகள் இருவருக்கும் டூப் பயன்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் அந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதத்தை அதில் நடித்த நடிகை யமுனா இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் சைத்ராவும், யமுனாவும் ரோப்பின் உதவியுடன் எப்படி நடித்தனர் என்பதை பார்க்க முடிகிறது. என்னதான் ரோப் என்றாலும் நடிகைகள் இருவரும் ஒரு சீரியலுக்காக இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Advertisement