'ரொமாண்டிக் ஃபேண்டஸி' படத்தில் நடிக்கும் சமந்தா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

3 years ago 740

Puthiyathalaimurai-logo

சினிமா

16,Oct 2021 01:55 PM

Dream-Warrior-pictures-to-announce-that-Samantha-is-on-board-for-their-next--Directed-by-Shantharuban

நடிகை சமந்தா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ தெலுங்கில் ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் நடிகை சமந்தா தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். இதற்கான, அறிவிப்பு விஜயதசமியை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. ரொமாண்டிக் ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்குகிறார்.

image

இவர் ‘ஒருநாள் கூத்து’ பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசனிடமும், சூப்பர் ஹிட் அடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமியிடமும் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article