புதுடில்லி:மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பா.ஜ., - எம்.பி.,யான வருண் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேசிய பழைய 'வீடியோ'வை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.போராட்டம்நேரு - இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த மேனகா மற்றும் அவரது மகன் வருண், பா.ஜ.,வில் உள்ளனர். மேனகா மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக இருவரும் கட்சியில் ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில், நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இதில் விவசாயிகளுக்கு ஆதர வாக வருண் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் பா.ஜ.,வின் தேசிய செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது மேனகா, வருண் அதில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.,வுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பதிவுகளை வருண் வெளியிட்டு வருகிறார்.அந்த வரிசையில் நேற்று வெளியிட்ட பதிவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேசிய பழைய 'வீடியோ'வை அவர் இணைத்து உள்ளார்.அடக்குமுறைஅந்த வீடியோவில், 'விவசாயிகளை அரசு துாண்ட வேண்டாம். பயமுறுத்த முயற்சிக்க வேண்டாம். விவசாயிகள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். 'அமைதியான அவர்களது போராட்டத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை.
அரசின் அடக்குமுறை தொடர்ந்தால், நாங்களும் அந்தப் போராட்டத்தில் இணைவோம்' என, வாஜ்பாய் பேசியுள்ளார்.'மிகப் பெரிய இதயம் உள்ள தலைவரின் நியாயமான பேச்சு' என, அந்த வீடியோவுடன் தன் பதிவில் வருண் குறிப்பிட்டு உள்ளார்.
Advertisement