சினிமா
Published : 15,Oct 2021 12:27 PM
’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘விக்ரம் வேதா’ தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும், மாதவன் கதாபாத்திரத்தில் ஹிர்த்திக் ரோஷனும் நடிக்கிறார்கள். ஒரு வருடங்களுக்கும் மேலாக படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டிந்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக ‘விக்ரம் வேதா’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துபாயில் தொடங்கியுள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்தி ரீமேக்கிற்கும் ‘விக்ரம் வேதா’ என்றே தலைப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இந்தியிலும் இயக்குகிறார்கள்.
Related Tags : விக்ரம் வேதா, இந்தி ரீமேக், படப்பிடிப்பு, துவக்கம், ஹிர்த்திக் ரோஷன், புஷ்கர் காயத்ரி, vikram vedha, hindi remake, hrithik roshan, saif alikhan, shooting, starts,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved