விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் ஆரம்பம்
15 அக், 2021 - 15:41 IST
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் பலர் நடிக்க 2017ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் விக்ரம் வேதா.
இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை ஒரு வழியாக இன்று ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த சில வருடங்களாகவே இப்படத்தின் ஹிந்தி ரீமேக் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், இப்போதுதான் அனைத்தும் செட்டிலாகி ஆரம்பித்துள்ளார்கள்.
தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்குகிறார்கள். மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், ஷ்ரத்தா கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே, கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவ் ஆகியோர் நடிக்க உள்ளார்களாம்.
எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஒரு கதைதான் விக்ரம் வேதா கதை. தமிழைப் போலவே ஹிந்தியிலும் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- ராஜவம்சம்
- நடிகர் : சசிகுமார்
- நடிகை : நிக்கி கல்ராணி
- இயக்குனர் :கதிர்வேலு
- வெள்ளை யானை
- நடிகர் : சமுத்திரக்கனி
- நடிகை : ஆத்மியா
- இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா