விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை
16 அக், 2021 - 13:51 IST
விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படம் சமீபத்தில் வெளிவந்தது. தற்போது அவர் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 படங்களில் நடித்து வருகிறார். இதில் பிச்சைக்காரன் 2வை அவரே இயக்குகிறார்.
இதற்கிடையில் விஜய் ஆண்டனி பாலாஜி குமார் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு கொலை என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதனை விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தை இன்பினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
Advertisement