“விஜய் நினைத்தால் காலை 7 மணி ஷுட்டிங்க்கு 11 மணிக்கு கூட வரலாம். ஆனால்?” - எஸ்.ஜே சூர்யா

2 years ago 856

SJ-Surya-praises-actor-Vijay

”விஜய் 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 6.55 மணிக்கே மேக்கப்புடன் ரெடியாக இருப்பார். அவரின் பங்ச்சுவாலிட்டி ரொம்பப் பிடிக்கும்” என்று பாராட்டியுள்ளார் நடிகர் எஸ்.ஜே சூர்யா.

சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. 53 நாடுகள் பங்கேற்கும் இவ்விழாவில் பங்கேற்ற இயக்குநர் எஸ்.ஜே சூர்யா நடிகர் விஜய்யை பாராட்டியுள்ளார். விஜய் குறித்து அவரிடம் கேட்டபோது, “விஜய் சார் பற்றி நான் என்ன சொல்வது. தமிழகமே சொல்கிறதே. இப்போது தமிழகம் மட்டுமல்ல, தெலுங்கு மக்களும் சொல்லப்போகிறார்கள். அங்கேயும் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கிறார். விஜய் சார் ரொம்ப சின்சியரான நடிகர். அவருக்கு பணம் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. அதையெல்லாம் தாண்டி சம்பாதித்து வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்துட்டார். அவர் நினைத்தால் படப்பிடிப்புத் தளத்திற்கு 11 மணிக்குக்கூட வரலாம். யாரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்.

image

ஆனால், அவரை நான் ரொம்ப அதிகமாகப் பார்த்து மிரளும் ஒரு விஷயமென்றால், காலை 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 6.55 க்கே மேக்கப்புடன் ரெடியாகியிருப்பார். அவர் சின்சியாரிட்டியிலும் பங்ச்சுவாலியிட்டிலும் ரொம்ப ரொம்ப சூப்பர்” என்று பாராட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Read Entire Article