விண்வெளி ஆய்வு மையத்துடன் சீனா விண்கலம் இணைந்தது

3 years ago 800

பீஜிங்-சீனா அனுப்பிய விண்கலம், விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. 'ஷென்சோ - 13' ஆனால் சீனா தனித்து 'டியான்ஹி' என்ற ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது.

latest tamil news

சீன விஞ்ஞானிகள், நேற்று, கோபி பாலைவனத்தில் உள்ள ஜிகுயான் ஏவுதளத்தில் இருந்து, 'லாங் மார்ச் - 2எப்' என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தினர். இந்த ராக்கெட், வாங் யபிங், ஜிகங், யி குவாங்பு என்ற மூன்று விண்வெளி வீரர்களுடன் 'ஷென்சோ - 13' விண்கலத்தை சுமந்தபடி விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதில் வாங் யபிங், முதன் முதலாக சீன விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்ற பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

latest tamil news

ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம், புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள டியான்ஹி விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது.ராக்கெட் புறப்பட்ட ஆறரை மணி நேரத்தில் இந்த இணைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வுக் கழகம் தெரிவித்து உள்ளது.ஆய்வுக் கூடம்விண்வெளி வீரர்கள் ஆறு மாதங்கள் விண்வெளி ஆய்வுக் கூடத்தில் தங்கி அதனை கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவர். சீனா ஏற்கனவே அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், மூன்று மாதங்கள் டியான்ஹி மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு கடந்த மாதம் பூமிக்குத் திரும்பினர்.

Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article