விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு , பூமியை காப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என பிரிட்டன் இளவரசர் வில்லியம் கூறியுள்ளார்.
Advertisement
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர்களும் , தொழிலதிபர்களும் விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இளவரசர் வில்லியம் இவ்வாறு கூறியுள்ளார்.
Advertisement
உலகில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தவர்கள் , மனித வாழ்வுக்கு மற்றொரு கிரகத்தை தேடாமல் நமது பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.