விளம்பரத்திலிருந்து சினிமாவுக்கு வரும் ஹர்ஷடா விஜய்
15 அக், 2021 - 15:08 IST
விளம்பரபட நடிகையாகவும், மாடல் அழகியாகவும் இருக்கிறவர் ஹர்ஷடா விஜய். இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகி உள்ள இசை ஆல்பங்களில் ஆடி உள்ளார். அனபெல் சேதுபதி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர் நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் ஹர்ஷடா ஆடியுள்ள யாத்தி யாத்தி என்ற தமிழ் இசை ஆல்பம் வெளியாகி உள்ளது. இதில் அவருடன் அஸ்வின் குமார் ஆடியுள்ளார். கவுதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். அனுராதா ஸ்ரீராம், யாழின் நிசார், அபிஷேக் பாடி உள்ளனர். ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஏஎன்எஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆனந்த் ராஜமோகன், நாகப்பன், நிக் ஸ்டோலன் தயாரித்துள்ளனர். சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- ராஜவம்சம்
- நடிகர் : சசிகுமார்
- நடிகை : நிக்கி கல்ராணி
- இயக்குனர் :கதிர்வேலு
- வெள்ளை யானை
- நடிகர் : சமுத்திரக்கனி
- நடிகை : ஆத்மியா
- இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா