வெறும்காலில் ஜூனியர் என்டிஆரின் மின்னல் வேகம்; பிரமித்த ராஜமவுலி
09 ஜன, 2022 - 19:30 IST
ஆர்ஆர்ஆர் படம் வெளியீடு தள்ளிப்போனத்தில் ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதேசமயம் படம் வெளி வருவதற்குள் இயக்குனர் ராஜமவுலி படம் குறித்தும் அதில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் குறித்தும் தனது பேட்டிகளில் புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர். அப்படி ஜூனியர் என்டிஆரின் அறிமுக காட்சி குறித்து ஒரு பிரமிப்பூட்டும் தகவலை கூறியுள்ளார் ராஜமவுலி.
இந்தப்படத்தின் அறிமுக காட்சி பல்கேரியாவில் உள்ள காடு ஒன்றில் படமாக்கப்பட்டது. அதில் ஜூனியர் என்டிஆர் வெறுங்காலோடு ஓடிவர வேண்டிய காட்சி. காட்சிப்படி வெறும் காலில் அவர் ஓட வேண்டும்.. ஆனால் ரிகர்சலின்போது கால்களில் ஷூக்களை அணிந்தபடி ஓடியுள்ளார் ஜூனியர் என்டிஆர். காட்சியை படமாக்க ஆரம்பித்ததும் வெறும் காலில் மின்னல் வேகத்தில் ஓடினாராம் ஜூனியர் என்டிஆர்.
அதற்கு முன்னதாக ஒரு ஸ்டன்ட் ஆர்டிஸ்ட் ஒருவரை ஓடவைத்து அந்த பாதையில் கற்கள், முட்கள் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துகிறதா என சோதனை ஓட்டமும் நடத்தினார்களாம்.. ஆனால் அவர் ஓடியதை விட ஜூனியர் என்டிஆரின் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது என பிரமிப்புடன் கூறியுள்ளார் ராஜமவுலி.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்