ஷங்கர், ராம்சரண் படம் பற்றி கியாரா தந்த அப்டேட்
15 அக், 2021 - 15:29 IST
தமிழ் இயக்குனரான ஷங்கர், தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள 15வது படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்ப விழா கடந்த மாதம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் ஹிந்தி நடிகையான கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார் கியாரா.
“இது ஷங்கர் சாரின் படம். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருடன் பணிபுரிவது எனக்குப் பிடித்த ஒன்று. நம்பமுடியாத ஒரு இயக்குனர். அவருடைய காலத்தில் முன்னோடியாக இருந்தவர். எனது கதாபாத்திரம் பற்றி சொல்ல முடியாது. ஆனால், போஸ்டரை வைத்து இது ஒரு அரசியல் படம் என சொல்வீர்கள்.
படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை. ஆனால், படத்தில் ஒரு அற்புதமான மெசேஜ் இருக்கிறது, அற்புதமான கதை இருக்கிறது, ஒரு பவர்புல்லான படமாக அமையும். ஷங்கர் சாரின் ஸ்டைலில் இப்படம் அமையும்,” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நவம்பர் மாதம் முதல் கியாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- ராஜவம்சம்
- நடிகர் : சசிகுமார்
- நடிகை : நிக்கி கல்ராணி
- இயக்குனர் :கதிர்வேலு
- வெள்ளை யானை
- நடிகர் : சமுத்திரக்கனி
- நடிகை : ஆத்மியா
- இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா