ஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்கள் உலகளவில் ரிலையன்சுக்கு 52வது இடம்

2 years ago 586

புதுடில்லி:ஊழியர்களை சிறப்பாக நடத்தும், உலகளவிலான நிறுவனங்களின் 2021ம் ஆண்டுக்கான பட்டியலை ‘போர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ இந்திய நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. போர்ப்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், ஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்களின் உலகளாவிய பட்டியலை வெளியிடுவது வழக்கம். ஆய்வுநிறுவனங்களின் ஊழியர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தி, போர்ப்ஸ் இந்த பட்டியலை தயாரித்து வெளியிடும்.
இந்த பட்டியலில் மொத்தம் 750 நிறுவனங்கள் பட்டியலிப்பட்டுள்ளன.இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உலகளவில் 52வது இடத்தைப் பிடித்துள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 65 இடத்தையும், எச்.டி.எப்.சி., வங்கி 77 வது இடத்தையும், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் 90 வது இடத்தையும் பிடித்துள்ளன.பாரத ஸ்டேட் வங்கி 119 இடத்தையும், எல் அண்டு டி., 127வது இடத்தையும் பிடித்துள்ளன.

இன்போசிஸ் 588 வது இடத்தையும், டாடா குழுமம் 746வது இடத்தையும், எல்.ஐ.சி., 504வதுஇடத்தையும் பிடித்துஉள்ளன.சமத்துவம்உலகளவில் ‘சாம்சங்’முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட், அமேசான், ஆப்பிள், ஆல்பபெட், டெல் டெக்னாலஜிஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சீனாவைச் சேர்ந்த ‘ஹூவாவே’ உலகளவில் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.58 நாடுகளில், 1.5 லட்சம் ஊழியர்களை கொண்டு, 750 நிறுவனங்கள் கொண்ட இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுஉள்ளது.

ஆய்வில் பங்கேற்றோரிடம் நிறுவனத்தின் இமேஜ், பொருளாதார செயல்பாடு, திறன் மேம்பாடு, பாலின சமத்துவம் மற்றும் சமூக பொறுப்புணர்வு போன்ற பல அம்சங்கள் குறித்து மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Read Entire Article