நாளை தங்க பத்திர வெளியீடு:; ஒரு கிராம் விலைரூ. 4,786

2 years ago 588

நாளை தங்க பத்திர வெளியீடு:; ஒரு கிராம் விலைரூ. 4,786

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
01:18

மும்பை:மத்திய அரசின் ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்க இருப்பதாகவும்; 1 கிராம் தங்கத்தின் விலை 4,786 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை துவங்கவிருக்கும் இந்த பத்திர வெளியீடு, ஐந்து நாட்கள் அதாவது, 14ம் தேதி வரை நடைபெறும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து, ௧ கிராம் தங்கத்தின் விலை 4,786 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், இந்த தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.நிதியமைச்சகத்தின் சார்பாக, ரிசர்வ் வங்கி இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும்.
வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படும். ‘கிரெடிட், டெபிட்’ கார்டு, வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.
இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,736 ரூபாய்க்கு கிடைக்கும்.கடந்த நவம்பர் 29ம் தேதி முதல், டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெற்ற இதற்கு முந்தைய எட்டாவது தங்க பத்திர வெளியீட்டில், ௧ கிராம் 4,791 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனி நபர்கள் அதிகபட்சமாக, 4 கிலோ தங்கம் வரை இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் போன்றவை, 20 கிலோ வரை முதலீடு செய்யலாம். பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news

மைக்ரோ ஏ.டி.எம்., என்றால் என்ன? அந்த வசதியைபயன்படுத்துவது எப்படி?ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.கடைகளில் ... மேலும்

business news

‘டிஜிட்டல்’ வழிகளை நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ்டேட் துறையில் ... மேலும்

business news

சந்தை மதிப்பில் சாதனைமும்பை பங்குச் சந்தையின், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தளத்தில் ... மேலும்

business news

புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், ... மேலும்

business news

புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நடப்பு ஆண்டில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு ... மேலும்

மேலும் செய்திகள் ...

Advertisement

Advertisement

Advertisement

dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
Read Entire Article