ரத்தன் டாடாவின் சுயசரிதை ஏலத்தில் வென்ற நிறுவனம்
பதிவு செய்த நாள்
07
ஜன
2022
23:23
புதுடில்லி:‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் கவுர தலைவரான ரத்தன் டாடாவின் சுயசரிதை, விரைவில் அச்சு வடிவில் வெளியாக உள்ளது.
ரத்தன் டாடாவின் சுயசரிதையை புத்தகமாக வெளியிடுவதற்காக, அண்மையில் உலகளவில் ஏலம் நடைபெற்றது. இதில், பிரிட்டனை சேர்ந்த ‘ஹார்பர்காலின்ஸ்’ நிறுவனம், ஏலத்தில் வென்று, புத்தகத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.
இந்த சுயசரிதைக்கான ஒப்பந்தம், இந்தியாவின் மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.ரத்தன் டாடாவின் இந்த வாழ்க்கை சரிதத்தில், அவரது குழந்தை பருவத்தில் துவங்கி, கல்லுாரி வாழ்க்கை, தொழிலதிபராக பொறுப்பேற்று சாதனை சிகரங்களை தொட்டது வரையிலான, 84 ஆண்டு கால வாழ்க்கை, விரிவாக விளக்கப்பட உள்ளது.
இந்த உரிமையை பெற்றது குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சுயசரிதையை யார் எழுத உள்ளார் என்பது இனிதான் தெரிய வரும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
மைக்ரோ ஏ.டி.எம்., என்றால் என்ன? அந்த வசதியைபயன்படுத்துவது எப்படி?ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.கடைகளில் ... மேலும்
‘டிஜிட்டல்’ வழிகளை நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ்டேட் துறையில் ... மேலும்
சந்தை மதிப்பில் சாதனைமும்பை பங்குச் சந்தையின், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தளத்தில் ... மேலும்
புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், ... மேலும்
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நடப்பு ஆண்டில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு ... மேலும்
மேலும் செய்திகள் ...
|
Advertisement |
Advertisement |
Advertisement |
|
|